சலீம் றமீஸ்-
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேச தமிழ் முஸ்லிம் மக்களுக்கான கொங்கிறீட் வீதிகள் வைபவரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரவில் இடம் பெற்ற இந்த வீதி அபிவிருத்தி திட்டங்கள் கையளிக்கும் முழு நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும்,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஜெய்கா திட்டத்தின் 114.57 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சவளக்கடை நாவிதன் வெளி அண்ணாமலை வீதி(06 ஆம் பிரிவு உள்ளக வீதி), தபாற்கந்தோர் வீதி, அண்ணாமலை முகாம் அண்மை வீதி, வாய்க்கால் வீதி – அலகு 01, சொறிக்கல்முனை உள்ளக வீதி, கூழாவாடி சென்றல் காம்ப் வீதி ஆகியவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், ஆ27 வாய்க்கால் சந்தியில் பாலம் அமைப்பதற்கான அடிகல்லும் நாட்டி வைக்கப்பட்டது. இப்பாலத்திற்கு ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.ஏ.அமீர், ரி.கலையரசன், எம்.இராகேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.புஸ்பராஜா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன், தேசிய காங்கிரஸின் நாவிதன் வெளி பிரதேச அமைப்பாளர் எஸ்.எச்.அன்வர், ஜனாதிபதியின் இணைப்பாளரும், சம்மாந்துறை தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், பிரதேச சபையின் தவிசாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌஷாட், நாவிதன் வெளி பிரதேச சபை தவிசாளர் எஸ்.குணரெட்னம், பிரதேச செயலாளர் எஸ்.கரன், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.கே.சமட், பி.சுதர்ஜன் உட்பட அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment