அல்லாஹ்ஒருவனை போற்றி புகழ்ந்தவனாக....
இலங்கையில் மூன்று தசாப்தமாக நிலவிய கொடூர விடுதலை புலிப் பயங்கரவாதம் எனும் நாடகம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட நிலையில்
மற்றுமொரு தொடர்நாடகம் அரங்கேற்றப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ் வேளையில் உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்
எந்தவொரு நாடகமும் ஒரு இயக்குனர் இல்லாமல் அரங்கேற்றப்படுவதில்லை.
அதற்கு விதிவிலக்கில்லாமல் இந்நாடகத்திற்கும்ஒரு இயக்குனர்இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் இவ்வியக்குனரை அறிவதென்பது தும்பில்நார்பிடுங்குவது போன்றதாகும். இந்நாடகம்சொல்ல வரக்கூடிய செய்தியை முழு உலகும்அறிந்திருப்பினும் அதற்கு ஒரு பொருத்தமான தலைப்பிடுவதும்கடினமாகவேயுள்ளது.
ஆனாலும் இதுவும் ஒரு பயங்கரவாத நாடகம் என்பதில் எவருக்கும் எவ்வித
ஐய்யப்பாடுமில்லை. இந்நாடகத்தில் குறிவைக்கபட்டிருப்பது இலங்கை வாழ் முஸ்லீம்களும்; இஸ்லாமும் ஆகும். இலங்கையில் இஸ்லாமும் முஸ்லீம்களும் ஆதி மனிதன் துவக்கத்திலிருந்து தொடபு பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
இருப்பினும் பண்நெடும் காலம் இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். என்பது மறைக்க முடியாத வரலாற்று நிதர்சன
உண்மையும் கூட. மேலும் இலங்கையில் முஸ்லிம்களும் பிரஜாவுரிமை
பெற்றிருப்பது இலங்கை முஸ்லீம்களினதும் தாயகம் என்பதனை
வெளிப்படுத்துகின்றது. இலங்கை அரசியலமைப்புச்சட்டத்தில் அடிப்படை
மனித உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்வுரிமைகளை
கேள்விக்குறியாக்கக் கூடியவர்களே இந் நாடகத்தின் பயங்கரவாதிகள்
ஆகும். ஒரு போதும் பயங்கரவாதிகள் உருவாகுவதில்லை; மாற்றமாக
அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள்.
அவ்வகையில் இலங்கை அரச மற்றும் பாதுகாப்புத் துறையில் செல்வாக்குடையவர்களின் அனுசரணையுடனே இந்நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்பதனை பச்சிளம் பாலகனும் அறியும் உண்மையுமாகும். எத்துனை காலம்தான் இவ்வுண்மைகளை பூட்டி வைப்பது. நாடகத்தில் தீவிரவாதிகளாக காவி அணிந்த அரச பல சேனாக்களும்; அரசியல் சாயம் பூசப்பட்ட சேனாக்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்பல்வேறு தரப்பாலும்தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்கள்செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். இக் கட்டுரையின் நோக்கமும் முஸ்லிம்களின் தடுமாற்றமும்; அதனை குறைப்பதற்காக கைக் கொள்ள வேண்டிய சில வழி முறைகளை விபரிப்பதுமேயாகும்.
நாடகத்தில்சில நாடகக்காரர்கள்...
இலங்கையில் தொடரும்பயங்கரவாதத்தில் நாங்களும் முஸ்லிம் சமுகத்தின்
அரசியல் தலைமைகள் தான் என பீற்றக்கூடிய துப்பற்றவர்கள். இவர்களுள்
சில குறு நில அரசர்களும்உள்ளனர். அவர்களுக்கு இந்நாடகத்தில்
இலாபம்குறைவாக உள்ளதால் இவர்கள்செத்த பினங்களின் வேடத்தில்
அறிமுகமானவர்கள்.
இன்னும்சில நயவஞ்சக நாடகக்காரர்கள். இவர்கள் சமுகத்தால் வளர்க்கப்பட்டதோ அல்லது சமுகத்தை வைத்து வளர்ந்து விட்ட புல்லருவிகள். இன்னும் சிலர்தங்களின்நிலையே கேள்விகுறியான நிலையில் நடிகர்வேடம் பூன எத்தனிப்பவர்கள். தங்களின்மார்க்கத்தை அடகு வைத்து சமுகத்தின்வாழ்வுக்காக காவிகளிடம்பாதுகாப்பு பிச்சை கேட்கக்கூடிய தறுதலைகளுமுள்ளனர்.
இன்னும் சிலரோ நாட்டின் சர்வாதிகாரீகளின் கொடுக்குப்பிடிக்குள்மாட்டிக்கொண்டவர்கள். இவர்களால் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நாடகத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் நாடகக்காரர்கள்.
நாடகத்தின்மற்றுமொரு நாடகக்காரர்கள்அடுத்து...
நாங்கள்சமூகத்தை வழி நடத்தக்கூடிய இலங்கை முஸ்லிம்களின்மார்க்க
அறிஞர்களின்சபை என பீற்றக்கூடிய புரோகிதர்கள். சமுகம்எங்களுக்குக்கீழ்
ஒன்றுபடுவதன்மூலமே சமுகத்தின்விமோசனம்உண்டு என பழைய பல்லவி
பாடியவர்கள்; இல்லை நாட்டில்ஒன்பது அமைப்பு போதாது பத்தாவது ஒரு அமைப்புஅதில்நாம்எல்லோரும்ஒன்று கூடி ஒரு மஷூராவுக்கு வருவோம்என புது பல்லவி பாடும்நாடகக்காரர்கள். இவ்விரு நாடகக்காரர்களின்பாத்திரங்கள்ஒன்றாயினும்பெயர்கள் விசித்திரமானவை.
இவர்களின்நிலை இஸ்லாம் எனும் விளை நிலத்தில் விதக்கப்பட்ட முஸ்லிம்களை காளான்கள் தாக்க வரும் போதெல்லாம் தூரத்தில் நடப்பட்டுள்ள பயிர்கள் நுனியில் நடப்பட்டுள்ள பயிர்களை தாக்கும்போது
காளான்கள் சிறு கூட்டம்தான் தாக்குகிறது;
ஏனைய காளான்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என வேதாந்தம் பேசித்திரிவதுடன்; பயிர்களுக்கு பசளை இட்டால் போதும் பயிர்கள் செழித்து விடும் என பகல் கனவில் தத்தளித்து அன்று சிறு காலன்களுக்கு களைநாசினி அடிக்கத் தவறியதால் இன்று காளான்கள் பெருகி விளை நிலத்தை அறுவடை செய்யும் தருனமோ என நிலைமை மாறிவிட்டது.
இவர்கள் ஷிர்க்வைக்கும் முஷ்ரிக்குகளையும் பித்அத் வாதிகளையும் சமுகத்தை காட்டிக்கொடுப்பவர்களையும் கூட்டிக்கொடுப்பவர்களையும் கூட்டிணைந்து கண்ட பலன் ஒன்றும் இல்லை.
இவர்களின் பணியோ மாதமொருமுறை பிறை சர்ச்சையை தோற்று விப்பதும் கிரிக்கெட் சூதாட்டத்திட் கொரு அறிக்கையும் நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை கோழைகளாக்குவதட்கு இஸ்லாத்திற்கு புறம்பான தன்னிலை அறிக்கை சமர்ப்பித்து பயங்கரவாதிகளின் தலைமைகளை திருப்திப்படுத்துவதிலையே இவர்களது காலம் வீனடைந்து விட்டது.
தேவையேற்படின் நாங்கள் கொண்ட கொள்கையும் தடயம் தெரியாமல் அழிப்பதற்கும் தயங்கமாட்டார்கள் என்பது காணமல் போன ஐவேளை அச்ச நிலை குனூத் ஒரு எடுத்துக் காட்டு. மேலும் இப்புரோகிதர்களை விமர்சிக்க பேனாக்கள் முனைந்தால் உடனே உலமாக்களை விமர்சிக்கலாமா? என்றொரு கேள்வியுடன்கொந்தளிப்பார்கள். இவர்கள் சமூகப்பிரதிநிதிகள் அல்ல; தங்களினதும் தங்கள் இயக்கத்தினதும் ஊடகப் பிரதிநிதிகள்.
ஏனெனில் பயங்கரவாதம் அல்லாஹ்வின் மீதும் அவன் வழங்கிய மார்க்கத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் போர்க்கொடி தூக்கிய போதெல்லாம் தலைகாட்டாதவர்கள் தங்களையும் தங்களுடன் சார்ந்திருப்பவர்களையும் தங்களது இயக்கத்தையும் பயங்கரவாத முத்திரை குத்த முனையும் போதெல்லாம் பொறுமை காக்காமல் உடனே கொதித்தெழுந்த ஊடக அறிக்கை வெளியிட தவறவில்லை.
இத்தகையவர்கள்தானா எமக்கு வழி காட்டி விமோசனத்தை பெற்றுத்தரக்கூடியவர்கள். எம்மை நாம்மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்
ஒரு போதும்எமது நிலைமைகளை மாற்ற மாட்டான்சிந்திக்க மாட்டீர்களா ?
இப்பயங்கரவாத நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வாருங்கள்.
இதுவும்ஒரு ஜிஹாத்என்பதனை மறவாதீர்கள். அதற்கு சில வழி முறைகள்.
1. அல்லாஹுவுக்கு எதனையும்இணையாக்காது; இணையாளர்களுடன் கூட்டுச்சேராது தனித்து நின்று அல்லாஹ்வின்பால்பூரணதவக்குல் வைத்து எமது எக்காரியங்களையும்செய்திடுவோம்.
2. இலங்கை திரு நாட்டில்எச்சந்தர்ப்பத்திலும்இஸ்லாமிய வாழ்க்கை
நெறியை விட்டுக்கொடுக்கவோசமரசம்செய்யவோமுயற்சிக்காமல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி நின்று எமது வாழ்கையை அமைத்து தீன் பணி புரிந்திடுவோம்.
3. எமது பிரச்சினைகளுக்கு ஆட்சித்தலைமைகளையும்படைகளின் உதவியையும்நம்பியிராது கலிமா தையிபாவின்கீழ்ஒன்றிணைந்து
எமது பலத்தை நிருபிக்க வேண்டும்.
4. எமது பிரச்சினைகள்தொடர்பாக பூரணவிளக்கங்களை அல்லாஹ் ஒருவனை அஞ்சிடக்கூடிய உலமாக்கள்முன்வந்து இலங்கையிலுள்ள முஸ்லிம்நாடுகளின்உயர்ஸ்த்தானிகரங்களுக்கு கொண்டு செல்வோம்.
5. தாய்நாட்டில்எழக்கூடிய எப்பிரச்சினைகளும்நாளை உனது தாய் வீட்டையும்பாதிக்கும்என்ற உன்மைக்கேட்ப்ப முஸ்லிம்நாடுகளில்இருக்கக்
கூடிய ஆற்றலும்அறிவும்உள்ள சகோதரர்கள் அங்குள்ள அரசுகளுக்கு எமது
பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டிய கடமைப்பாடுடையவர்களாவீர்கள்.
6. இவைகளுடன்நாம்தளர்ந்து விடாது அல்லாஹ் ஒருவன் மீது பூரண
பொறுப்புச்சாட்டி தூய்மையான நிலையில் அவன் ஒருவனிடம்
கையேந்திடுவோம்.
நாம் இவ்வுலகில் வாழ வந்தவர்களல்ல மறுமை வாழ்வுக்காக வாழ வந்தவர்கள். இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.
0 comments :
Post a Comment