இக்பால் அலி-
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை அகில இலங்கை ரீதியில் நடத்தும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி குருநாகல் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு நேற்று 14-06-2014 சனிக்கிழமை கெகுணுனொல்ல தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் எஸ். எல். சலாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிரியுல்ல கல்வி வலயப் பணிப்பாளர் செல்வி ஜெயந்திலா, வடமேல் மாகாணக் கல்விப் பணிமனையின் நிர்வாகப்பிரிவுக்கான பணிப்பாளர் பீ. எம். நஷPர், பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், அல்ஹாஜ் பஷPர் அஹமட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் குருநாகல் மாவட்ட கல்வி வலயங்களின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை கெகுணுகொல்ல தேசிய பாடசாலையும் இரண்டாம் இடத்தை சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையும் மூன்றாம் இடத்தை பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியும் பெற்றுக் கொண்டன.
வெற்றிபெற்ற அணியினருக்கு அதிதிகளால் பெறுமதிவாய்ந்த பல பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. கெகுணுகொல்ல தேசிய பாடசாலை மாணவர் மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. சிரேஷ;ட அறிவிப்பாளரும் அதிபருமான ஏ, ஆர். எம். ஜிப்ரி பொது அறிவுப் போட்டியை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment