புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை நாட்டின் பல பாகங்களின் இன்று மாலை தென்பட்டமையினால் நாளை அதிகாலை நோன்பு நோற்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது.
கிண்ணியா, எருக்கலம்பிட்டி, அநுராதபுரம், மன்னார் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டுள்ளது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.
ரமழான் தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது தலைப் பிறையை கண்டவர்கள் பலர் தகுந்த ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினர். இதனையடுத்தே புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டமை தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment