மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான ஏ.எல்.தினவிழா நேற்று முன் தினம் 2014-06-26)அதிபர் ஏ.ஆர்.முஹம்மட் தௌபீக் தலைமையில் பாடசாலை திறந்த வெளியரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிம் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், விஷேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா ஆகியோருடன் ஆசிரிய ஆலோசகரும்,பாடசாலை மேம்பாட்டு நிகழ்சித் திட்ட இணைப்பாளருமான ரி.எல்.ஹபிபுள்ளாஹ் ஆகியோரும் கலந்த சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்;சிகள் இடம் பெற்றதுடன் 'எழவான்' சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இத்துடன் மாணவத் தலைவர்களுக்கான நியமனக்கடிதம் மற்றும் அடையாள அட்டை என்பனவும் வழங்கப்பட்டது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிம் அவர்களின் சேவையை கௌரவித்து அதிபர் ஏ.ஆர்.முஹம்மட் தௌபீக் மற்றும் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸர்றப் ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment