உலகக் கிண்ண கால்பந்து : நடப்புச் சாம்பியன் ஸ்பெயின் படுதோல்வி



லகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தனது முதல் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது.
கடந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர்களிடம் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி அவர்களை 5-1 எனும் கணக்கில் வென்றது
ஐரோப்பாவின் இரண்டு முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி சால்வடோர் நகரில் நடைபெற்றது
ஆட்டத்தின் போது அவ்வப்போது மழையும் பெய்தது.
இப்போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்ஃபோன்ஸோ பெனால்டி முறையில் ஒரு கோல் அடிக்க அந்த அணி 1-0 எனும் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நெதர்லாந்து அணியின் ராபன் வான் பெர்சி ஒரு கோலடிக்க இடைவேளை நேரத்தில் இரு அணிகளும் 1-1 எனும் நிலையில் இருந்தன.

இடைவேளைக்கு பிறகு மழையில் ஆட்டம் தொடங்கிய பிறகு, 53 ஆவது நிமிடத்தில் அயேன் ரோபென் நெதர்லாந்து சார்பில் ஒரு கோல் அடிக்க அந்த அணி 2-1 என்று முன்னிலை பெற்றது.

அப்படியான வலுவான நிலையில், ஸ்பெயினின் எதிர் தாக்குதலை திறமையாக சமாளித்த நெதர்லாந்து அணி, அதிரடியாக ஒரு நகர்வை முன்னெடுத்து 64 நிமிடத்தில் மிகவும் நேர்த்தியான முறையில் டி வெர்ஜ் ஒரு கோலடிக்க 3-1 எனும் நிலையை எட்டியது.

நடப்பு சாம்பியனான ஸ்பெயின் தமது ஆட்டத்தின் உத்தியை மாற்றியமைத்து நகர்வுகளை மேற்கொண்டபோதிலும், நெதர்லாந்து அணியின் வியூகத்தை உடைத்து முன்னேற முடியவில்லை.

ஆட்டத்தின் 72 ஆவது நிமிடத்தில் ராபன் வான் பெர்சி மேலும் ஒரு கோலை அடிக்க, நெதர்லாந்து அசைக்க முடியாத வகையில் 4-1 என வலுவான நிலையை பெற்றது.

சவப்பெட்டியில் கடைசி ஆணி என்று கூறும் வகையில் அயேன் ரோபென் நெதர்லாந்துக்காக தனது இரண்டாவது கோலை 79 ஆவது நிமிடத்தில் அடிக்க ஸ்பெயினால் 5-1 எனும் தோல்வியிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டது

இந்தப் படுதோல்வியை அடுத்து ஸ்பெயின் அடுத்து வரும் ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பை: கேமரூனை வென்றது மெக்ஸிகோ

பிரேசிலின் வடகிழக்கேயுள்ள நட்டால் நகரில் மழையிலே நடைபெற்ற ஒரு போட்டியில் கேமரூன் அணியை மெக்ஸிகோ 1-0 எனும் கணக்கில் வென்றது.

போட்டியின் இரண்டாவது பகுதியில் 61 ஆவது நிமிடத்தில், ஒரிபி பெராட்லா ஒரு கோல் அடிக்க மெக்ஸிகோ 1-0 என்று முன்னிலை பெற்றது.

பின்னர் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்ஸிகோ அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.

எந்தவொரு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் இதுவரை மெக்ஸிகோ, அப்ரிக்க அணியொன்றை தொற்கடித்தது கிடையாது

இந்தப் போட்டியிலும் நடுவரின் முடிவு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

இடைவேளைக்கு முன்னர் மெக்ஸிகோ அணியினர் இருமுறை பந்தை கோல் வலைக்குள் அடித்தனர். எனினும் இரண்டையும் ஆஃப்-சைட் என்று கூறி நடுவர் நிராகத்துவிட்டார்.

இந்தப் போட்டிக்கு கொலம்பியா நாட்டின் வில்மார் ரோல்டான் களநடுவராக இருந்தார்.

ஆட்டத்தின் பெரும்பாலான நேரம், பந்து மெக்ஸிகோ வீரர்களிடமே இருந்தது என்று ஃபிஃபாவின் புள்ளி விபர வரைபடம் கூறுகிறது.

இடைவேளையின் போது இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையே இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :