நாளை பஸ் கட்டணம் அதிகரிக்காது – தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் அமைச்சர்


ம்முறை பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைவாக வருடாந்தம் ஜுலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன.

எவ்வாறாயினும் பஸ் கட்டண அதிகரிப்பிற்கான தேவை தற்போது ஏற்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரேனுக்க துஷ்யந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் பஸ் சங்கங்கள் மத்தியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

ஒரு சில பஸ் உரிமையாளர் சங்கங்கள் ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று அல்லது நாளை பஸ் கட்டடங்கள் கட்டாயமாக அதிகரிக்கப்படவேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

செலவீனங்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பினால் பஸ் உரிமையாளர்கள் தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் கூறியுள்ளார்

தென்மாகாண பஸ் உரிமையாளர்களின் சங்கமும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இம்முறை மாறுபட்ட நிலைப்பாட்டில் உள்ளது.

இம்முறை பஸ் கட்டண அதிகரிப்பு இடம்பெறாது என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஜுலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பான கொள்கைக்கு அமைய கட்டண அதிகரிப்புக்கான தேவை இம்முறை ஏற்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு தற்போது அது குறித்து ஆராய்ந்து வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை பஸ் கட்டண அதிகரிப்பை தாம் கோரப்போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :