ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடந்த மூன்று வருடங்களாக உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ள இலங்கைக்கு அவகாசம் வழங்கிய போதிலும் அதனை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
அதன்பின்னரே இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அதனை மறுப்பதற்காக ஆளுங் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வித பலனும் இல்லை என நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெளிவாக எடுத்துக் கூறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.
அத்துடன் ஐ.நா விசாரணை தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலம் அநாவசிய சர்ச்சைகள் மாத்திரமே உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிபெ
நிபெ
0 comments :
Post a Comment