சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் தேசிய பாடசாலையின், மஹிந்தோதய தொழில்நுடப பீட கட்டட அடிக்கல் நாட்டு நிகழ்வு 27.06.2014 ஆம் திகதி அதிபர் எச்.எம் பாறூக் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.எல்.ஏ அமீர் அவர்களும், ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமாகிய கௌரவ அல் - ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களும், விசேட அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீம் அவர்களும், கௌரவ அதிதிகளாக கோட்டக் கல்வி அதிகாரி ஐ.ஏ ரசூல், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ. சலீம் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment