அளுத்கம முஸ்லிம்-சிங்கள பதற்றம்: தற்போதைய களநிலவரம்

பெளத்த தேரர் ஒருவர் மீது முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து அளுத்கம பிரதேசத்தில் இன்று மாலை பெரும் பதற்ற சூழல் ஒன்று நிலவியது. இந் நிலையில் தேரர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. இன்று இரவும் நீடித்த இந்த பதற்ற சூழல் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு தேரர்கள் அடங்கிய ஆயிரக்ககணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அளுத்கம பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்ததை அடுத்தே அங்கு பதற்ற சூழல் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் அளுத்கம பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு விஷேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந் நிலையில் அளுத்கம நகருக்கு அமைச்சர்களான ரோஹித்த அபே குணவர்தன, ராஜித்த சேனரத்ன மற்றும் குமார வெல்கம ஆகியோர் நேரில் சென்று நிலைமையை அவதானித்ததுடன் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனும் ஸ்தலத்துக்கு இன்று இரவு சென்று நிலைமைகளை ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்ந்தார்.


சம்பவம்நேற்றைய தினம் பாடகொடை விகாரையின் தேரர் ஒருவர் தனது சாரதியுடன் வாகனத்தில் சென்றவேளை முஸ்லிம் ஒருவருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வாகன சாரதி முஸ்லிம்களை கேவலமாக திட்டியதாக தெரிவித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது அருகில் இருந்த தேரரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தே நேற்று அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை சமாளிக்க பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முஸ்லிம்கள் மூவரை உடன் கைது செய்து பொலிஸ் பாதுகாப்பில் வைத்ததுடன் அவர்களை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


ராவன பலயகவினர் பொலிஸ்நிலையத்தை சுற்றிவலைப்புஇந் நிலையில் இன்று மாலையாகும் போது இராவண பலகாய அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் பிக்குகள் பலர் உள்ளிட்ட ஆயிரக்ககணக்கான மக்கள் அளுத்கம பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தே அவர்கள் பொலிஸ் நிலையத்தை சுற்ரி வளைத்தனர். எனினும் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதுடன் இராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - காலி வீதியின் போக்கு வரத்து சில மணி நேரம் பெரிதும் தடைப்பட்டது. எவ்வாறாயினும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களை கலைத்த பொலிஸார் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நகரின் பாதுகாப்பை பலப்படுத்தினர்.


அமைச்சர்கள் விஜயம்இன்று மாலை அளுத்கமவில் பதற்ற சூழல் நிலவிய நிலையில் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப் படுத்த அரசின் அமைச்சர்கள் சிலர் அங்கு விஜயம் செய்தனர். ம்னீன் பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, துறைமுகங்கள் தொடர்பான அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் அங்கு விஜயம் செய்திருந்தனர்.

இன்றைய தினம் அம்பாறையில் இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டிருந்ததுடன் உரிய பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.


பொலிஸ் மா அதிபர் விஜயம் இதேவேளை இன்று இரவு ஆகும் போது அளுதகம் நகருக்கு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்க கோன் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அளுத்கம நகரில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்தே அவர் அங்கு இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது நகரின் பாதுகாப்பு மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து இதன் போது அவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


அமைச்சரின் வாகனம் மீது கல்வீச்சுஇதேவேளை இன்று அளுதகம நகரின் நிலைமையை அவதனித்து பதயற்ற நிலைமையை சுமுகப்படுத்தும் விதமாக அங்கு விஜயம் செய்திருந்த போக்கு வரத்து அமைச்சர் குமார வெல்கமவின் வாகனம் ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது. குமார வெல்கமவின் டப்ளியூ.பீ.- கே.ஆர்.5515 என்ற ஜீப் ரக வாகனம் மீதே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசிய கல்வீச்சினால் சேதமடைந்துள்ளது. வாகனத்தின் முன்பக்க கண்ணாடி இதனால் சேதமடைந்தமைக் குறிப்பிடத்தக்கது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம்பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்தும் அளுத்கம பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் நின்ற ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கண்னீர் புகைப் பிரயோகம் செய்து கலைத்தனர். இதனை தொடர்ந்தே அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பொலிஸ் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவரையும் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றி வலைத்து பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியதை அடுத்தே பொலிஸார் குறைந்த பட்ச பலத்தை பிரயோகித்து கண்ணீர் புகையூடாக ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தமைக் குறிப்பிடத்தக்கது.


முஸ்லிம் கடைகள் மீதும் தாக்குதல்

இதேவேளை ஆர்ப்பட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது முஸ்லிம்களுக்கு சொந்தமான மூன்று கடைகள் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரதேசத்தில் மோதல் நிலைமை ஒன்ரு உருவாகலாம் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அட்டுளுகம பகுதியில் உள்ள கடைகள் மூன்றே இவ்வாறு கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகா அறிய முடிகின்றது.


நிலைமை கட்டுபாட்டில்

எவ்வாறாயினும் அளுதகம் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டது. இன்று இரவு 10.30 மணியாகும் போது களுத்துறை நகரம் வழமைக்கு திரும்பி இருந்ததாக குறிப்பிட்ட பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் நாளை அளுதகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :