த.நவோஜ்-
வாகரை கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் வெளவால்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை வாகரை பிரதேச சபையும், பொதுச் சுகாதாரப் பணிமனையும் இணைந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வித்தியாலயத்தில் மாணவர்களின் சுகாதாரம், கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாகரை பிரதேச சபைக்கு வித்தியாலய அதிபர் எஸ்.மோனசுந்தரம் செய்த முறைப்பாட்டையடுத்து விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
வாகரை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் தலைமையிலான பிரதேச சபை குழுவும், பொதுச் சுகாதார பணிமனையினரும் இணைந்து வெளவால்களை விரட்டி மாணவர்களின் கற்றலுக்கு உதவி செய்தனர்.
இப்பணியினை மேற்கொண்ட வாகரை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரனுக்கும், பிரதேச சபையினருக்கும், பொதுச் சுகாதார பணிமனையினரும் பாடசாலை சார்பில் நன்றி தெரிவிப்பதாக வித்தியாலய அதிபர் எஸ்.மோனசுந்தரம் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment