பொத்துவிலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு பஸ் வண்டி தொடர்பில் , பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சம்மந்தமாக யு.பதுர்கான் (பி.ச.உறுப்பினர்)உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் வழங்கியுள்ள மறுப்பறிக்கையை இங்கு தருகிறோம்.
அண்மையில் அக்கரைப்பற்று பஸ் டிப்போவின் 35வது ஆண்டு நிறைவு விழாவுக்கு 2014.05.30ம் திகதியன்று பிரதம அதிதியாக வருகை தந்த கௌரவ போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம அவர்கள் அறுகம்பை பிரதேசத்திலுள்ள பசுபிக் ஹோட்டலில் தங்கியிருந்தார். இதனை அறிந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களுக்கு அறிவித்து இருவருமாக போக்குவரத்து அமைச்சருடன் பொத்துவில் டிப்போவுக்கு சமூகமளித்தது உண்மையே.
அன்றைய தினம் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட 35வது ஆண்டு நிறைவு விழாவில், உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா அவர்கள் எமது பிரதேசத்தில் உள்ள பஸ் டிப்போக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் அவசியத்தை குறிப்பிட்டதோடு, பொத்துவிலுக்கு இரண்டு (02) சொகுசு பஸ்களும், அக்கரைப்பற்று டிப்போவுக்கு நான்கு (04) பஸ்களும் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியாக பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கிராமங்களின் அரசியல் அதிகாரத்தைப் பலப்படுதத்தி வரும் கௌரவ அதாவுல்லா அமைச்சர் அரசியலதிகாரமின்றிக் காணப்படும் நமது பொத்துவில் பிரதேசத்திற்கு கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று பல கோடிக் கணக்கான நிதியுதவிகளை அபிவிருத்திக்காக வழங்கி அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் நிலையில் பொத்துவிலுக்கான சொகுசு பஸ் வண்டியை அமைச்சர் அதாவுல்லா அபகரித்ததாகக் கூறப்படும் செய்தி அப்பட்டமான பொய்யாகும். இது வெறுமனே டிப்போக்களுக்கிடையில் நிர்வாக ரீதியிலான பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. இது அரசியல் ரீதியில் காழ்ப்புணர்ச்சி கொண்டு யார் பெயர் வாங்குவது என்ற அடிப்படையில் அமைச்சர் அதாவுல்லா அவர்களை சம்பந்தப்படுத்துவதானது பொத்துவில் பிரதேசத்தின் இன்றைய அபிவிருத்திப் போக்கில் ஆரோக்கியமற்றதே!
மேலும், பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரோடு இணைந்து கௌரவ உள்@ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா அவர்களோடு தொடர்புபட்டு பொத்துவில் பிரதேச சபையினதும், பொத்துவில் பிரதேசத்தினதும் அபிவிருத்திப் பணிகளில் செயற்பட்டு வந்த கௌரவ தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்கள் குறித்த சொகுசு பஸ் கையளிப்பு விடயத்தில் தொடர்புபடாத அமைச்சர் அதாவுல்லா அவர்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில் ஊடகங்களில் ஆவேசமான அறிக்கைகளையிட்டு அரசியல் பேசுவதானது பொத்துவிலின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் அவரது அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் அதாவுல்லா அவர்;களின் அண்மைக்கால அபிவிருத்திப் பங்களிப்பு தொடர்பிலான அரசியல் ரீதியிலான அச்சத்தையும் வெளிப்படுத்துவதாகவுமே கண்டு கொள்ள முடிகிறது.Click pottuvil chairman News
யு.பதுர்கான் (பி.ச.உறுப்பினர்)
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச
இணைப்பாளர்
யு.பதுர்கான் (பி.ச.உறுப்பினர்)
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச
இணைப்பாளர்
0 comments :
Post a Comment