முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக அமீன் மீண்டும் தெரிவு



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பதாஹ் கே. அல் முல்லாஹ் கலந்துகொள்ளவுள்ளார்.

தன்போது தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதி வி.டி.தமிழ்மாறன் சிறப்புரையாற்றவுள்ளார்.

ஒரு அமர்வாக இடம்பெறும் இந்த நிகழ்வின் இறுதியில் அடுத்த வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
எனினும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் போட்டியிட்டின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பதவிகளுக்கு ஒருவர் வீதம் விண்ணப்பித்தமையினாலேயே போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தலைவராக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீனும் பொதுச் செயலாளராக விடியல் இணையத்தள ஆசிரியர் றிப்தி அலியும் பொருளாளராக சுயாதீன ஊடகவியலாளர் எச்.எம்.பாயிஸும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 15 கொண்ட செயற்குழுவிற்கு 18 பேர் போட்டியிடுகின்றனர். எம்.இஸட்.அஹமட் முனவ்வர், எஸ்.ஏ.அஸ்கர் கான், ஏ.ஏ.எம்.பஸ்லி, எம்.பி.எம்.பைரூஸ், ஏ.ஜே.எம்.பெரோஸ், புர்கான் பீ. ,ப்திகார், இர்ஷாத் ஏ. காதர், ஜாவிட் முனவ்வர், கலைவாதி கலீல், எம்.கே.முபாரக் அலி, ஜே.இஸட்.ஏ.நமாஸ், எம்.ஐ.நிசாம்தீன், எம்.எஸ்.எம்.ராபி, ரசீட் எம்.ஹபீல், சாதிக் சிஹான், சாமிலா ஷெரீப், தாஹா முஸம்மில், ஏ.எஸ்.யாசீம் ஆகியோரே செயற்குழுவிற்காக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :