அஸ்ரப் ஏ சமத்-
முஸ்லிம் கல்வி சுற்று வட்டத்தின் 5வது தொழிற்பயிற்சி நிலையம் பாணந்துறை சரிக்கமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது. பாணந்துறையில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் யுவதிகள் தமது பாடசாலைக் கல்வியை கற்று விட்டு வீடுகளிலேயே தங்கிக் கிடக்கின்றனர்.
இவர்களுக்காக முஸ்லீம் ஸ்டடி சேர்க்கல் தலைவி திருமதி அமீனா பாயிஸ் முஸ்தபா முயற்சியிலும் மல்டிலெக்ஸ் கம்பணியின் அனுசரனையில் அழகுசாதனப் பயிற்சி, உணவு பண்டங்கள் உற்பத்தி, தையல், ஆங்கிலம், எம்போரைடிங் போன்ற பயிற்சிகளை 4 மாத காலத்திற்கு பயிற்றுவித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சுயதொழில் முயற்சிகளில் வீடுகளில் இருந்தே செய்தவதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இம் மாணவிகளுடன் சிங்கள சமுகத்தில் இருந்து துஸ்பிரோயகத்திற்குட்பட்ட 20 மாணவிகளும் இப் பயிற்சிகளில் சேர்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. சிறுவர் மறுவாழ்வு திணைக்கள ஆணையாளர் திருமதி ஜமுனா பேரேராவும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment