இலங்கை மீதான விசாரணை ஐ.நாவின் ராஜதந்திர வானூர்தித் தாக்குதல் ; கலாநிதி தயான்

லங்கை மீதான விசாரணை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நியமித்துள்ள ஆலோசனை மற்றும் உதவிக்குழுவை இலங்கைக்கு எதிரான ராஜதந்திர வானூர்தி தாக்குதல் என கலாநிதி தயான் ஜயதிலக வர்ணித்துள்ளார். அந்தளவில் மிகவும் வலுவான குழு இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின், அரசியல் விமர்சகரும் ஜெனீவாவிற்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக த நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

காசா சம்பந்தமாக அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் உண்மையைக் கண்டறியும் குழுவில் ரிச்சட் கோல்ட்ஸ்ரோன் என்பவர் மாத்திரமே முக்கியமாக கருதப்பட்டார்.

எனினும், இலங்கை தொடர்பான குழுவில், ஆரம்பம் முதல் இறுதிவரையிலான பெயர்கள் மிகவும் வலுவான நிபுணர்களைக் கொண்டுள்ளது.

பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மாட்டி அட்டிசாரி, நியூ சிலாந்தின் முன்னாள் ஆளுனர் நாயகம் டெமே சில்வியா காட்ரைட், பாக்கிஸ்தானிய முன்னணி சட்டத்தரணி அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

இதனைத் தவிர, விசாரணைக் குழுவில், தடையவியல் நிபுணர்கள், பாலியல் தொடர்பான நிபுணர், சட்ட வகுப்பாளர்கள் மற்றும் விசேட தகைமைகளைக் கொண்டவர்கள் என மேலும் 12 பேர் உள்ளடங்கியுள்ளார்கள்.

இந்த குழு எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது பணிகளை முழுமையாக நிறைவேற்றி முடிக்கவுள்ளது.

இந்த குழு, போருக்குப் பின்னர் இலங்கையின் உள்ளக நல்லிணக்க நடவடிக்கைகள், அளுத்கம சம்பவம், மதங்கள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான விடயங்களையும் கண்காணிக்கவுள்ளது.

எனவே இந்த குழு இலங்கைக்கு எதிரான ராஜதந்திர வானூர்தி தாக்குதல் என தயான் ஜயதிலக வர்ணித்துள்ளார்.
டெ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :