அழுத்கமைக் கலவரம் : லண்டன் மாநகரில் கண்டனப் பேரணி

ழுத்கமைக் கலவரத்தைக் கண்டித்தும், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றினை லண்டன் மாநகரில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு லண்டனில் அவசரமாகக் கூடிய பல்வேறு இலங்கை முஸ்லிம் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் நிலைமைகளை ஆராய்ந்து இத்தீர்மானத்தினை எடுத்துள்ளனர்.

எதிர்வரும் புதன்கிழமை (18.06.2014) பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு முன் பிற் பகல் 2 மணி தொடக்கம் 4 மணி வரை இடம்பெறவுள்ள இப்பேரணியில் பிரித்தானிய வாழ் சிங்கள ,தமிழ் மக்களும் கலந்து கொண்டு இலங்கையில் இனங்களுக்கிடையிடலான ஐக்கியத்தை சீர் குலைக்கும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தவுள்ளனர்.

இதேவேளை அளுத்கமை கலவரத்தில் பதிக்கப்பட்டவர்களின் லண்டன் வாழ் உறவினர்கள் பிரித்தானிய வெளி விவகார செயலாளர் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :