வீட்டு வேலையாட்களுக்கு அஜீத் வீடு கட்டி கொடுத்துள்ளார். இதன் கிரஹப்பிரவேசம் விரைவில் நடக்கிறது. அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல் காரர், தோட்டக் காரர், டிரைவர் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தை பணியாளர்கள் பெயரிலேயே ஆளுக்கு அரை கிரவுண்ட் என பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
அதன் பிறகு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அஜீத் மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார். பணியாளர்கள் குடும்பத்தினரும் வந்து இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது 10 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் மரச்சாமான்கள் வாங்கி போடப்பட்டு உள்ளன. அஜீத் தற்போது கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக மலேசியா சென்றுள்ளார்.
சில தினங்களில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார். அதன் பிறகு கிரஹப்பிரவேசம் நடத்தி தனது பணியாளர்கள் ஒவ்வொரு வரையும் புது வீட்டில் குடி வைக்கிறார்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன..?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment