த.நவோஜ்-
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஒருவர் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு வீதி நாடகம் புதன்கிழமை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றது.
ஹெமிட் நிறுவனத்தின் அனுசரணையில் வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பேரில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகம், வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் கல்மடு கிராமம் ஆகிய மூன்று இடங்களில் இவ் விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.ரி.தினேஸ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கி அவர்களையும் சமூகத்துடன் இணைத்து அவர்களது உணர்வுகள், தேவைகளை அறிந்து சகோதரத்துடன் வாழ்வது தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகமாக அமைந்திருந்தது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலா மன்ற அங்கத்தவர்களின் பங்களிப்புடன் எஸ்.இன்பராஜின் நெறியாள்கையில் இவ் வீதி நாடகம் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment