சம்பிக்க ரணவக்க உணர்வைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதாக முஸ்லிம் கவுன்சில் குற்றம்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குரோத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதாக முஸ்லிம் கவுன்சில் குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம்

சமூகம் குறித்த சம்பிக்கவின் கடுமையான விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. அமைச்சரின் கருத்துக்களுக்கு சில பதில்களை அளிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

அலுத்கம பிரதேசத்தில் 3000 முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சிங்களவர்களை தாக்கத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது .இலங்கையில் ஜிஹாதிய, கடும்போக்குடைய முஸ்லிம் அமைப்புக்கள் இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என முஸ்லிம் கவுன்சில் தெரிவித்ள்ளது

சிரேஸ்ட அரசியல் தலைவர் ஒருவர் இவ்வாறு குரோத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை வருத்தமளிப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :