விதவைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வு-படங்கள் இணைப்பு

த.நவோஜ்-
சமூக சேவைகள் அமைச்சினால் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான தியாவட்டுவான் கிராமத்தில் உள்ள விதவைகளுக்கு சாரிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசேகர சூரியாராச்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி.நளீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி சமுர்த்தி வங்கி முகாமையார் ஏ.ஐ.சரீப், தியாவட்டுவான் மாதர் சங்கத் தலைவி யூ.எல்.ஆயிஷா, செம்மண்ணோடை மாதர் சங்கத் தலைவி லத்தீபா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு சாரிகளை வழங்கி வைத்தனர்.


இதன்போது தியாவட்டவான் கிராமத்தில் உள்ள இருபத்தைந்து விதவைகளுக்கு சாரிகள் வழங்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :