ISIL புதிய கிலாபத் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது

ஈராக் சிரியா ஆகியாநாடுகளில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய கிலாபத் அரசு ஒன்றை உருவாக்கியிருப்பதாக இஸ்லாமியத் போராளிகள் அமைப்பான ஐஸிஸ்(ISIL)அறிவித்திருக்கிறது.

இந்த புதிய கிலாபத் அரசின் கலீபாவாகவும் , உலகின் அனைத்து முஸ்லிம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபூ பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது. அவர் இனி கலிபா இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுவார் என்று அது அறிவித்துள்ளது

இந்த கிலாபத் வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு ஈராக்கின் தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும் அது அறிவித்திருக்கிறது. இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒலிவடிவப் பிரகடனம் ஒன்றில், இந்த போராளிகள் அமைப்பு எல்லா முஸ்லிம்களும் இந்தப் புதிய கலிபாவுக்கு தங்கள் விசுவாசத்தைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

இந்த புதிய நாடு, இனி சாதாரணமாக, “இஸ்லாமிய அரசு” என்று மட்டுமே அறியப்படும் என்று அது அறிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :