அண்மைய வன்முறைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது , அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும்
என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் , இப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்காவிட்டால் 83 ஆண்டு ஜூலை கலவரம் தொடர்பில் அன்றைய ஜனாதிபதி J.R.ஜெயவர்த்தன எப்படி வரலாற்றில் பதியவு செய்யப்பட்டு உள்ளாரோ அதேபோன்று இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரலாற்றில் பதியப்படுவார் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் அதன் எட்டு உறுப்பினர்களும் வெளியேறுவர்கள் , முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒரு குரலாகவும் , செயலாகவும் இருந்து வருகிறது. எப்போது குரலாக மட்டுமே இருக்க முடியும் என்ற நிலை வருகிறதே அப்போது நாங்கள் வெளியில் வந்து குரல் கொடுப்போம் .
இப்போது உள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதுதான் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்றால் நாங்கள் வெளியேறுவோம் எனவும் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.LM
0 comments :
Post a Comment