பரக்கத்துல்லாஹ்-
இன்று (2014.06.15) இடம்பெற்ற ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25வது பேராளர் மாநாட்டில் பின்வரும் பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
01. முஸ்லிம்களின் சமய அனுஷ்டானங்களை சீர்குழைக்கும் சகல நடவடிக்கைகளையும், பள்ளிவாசல்களையும் மற்றும் வர்த்தக நிலையங்களையும் குறிவைத்து நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.
02. மதங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மையையும், சிறுபாண்மை இனங்கள் அவற்றின் உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றை அரசாங்கம் உறுப்படுத்த வேண்டும்.
03. மக்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வும், கௌரவமான சகவாழ்வும் அதிகாரப்பரவலாக்கல் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
04. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாம் நிராகரிக்கின்றோம்.
05. மாகாண சபை அதிகாரங்களை குறைக்கும் அல்லது நலிவடையச்செய்யும் சட்டமூலங்கள் அனைத்தையும் நாம் நிராகரிக்கின்றோம்.
06. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஐந்து வருடங்கள் கடந்தும் யுத்த காலத்தில் இடம்பெயர்த்தப்பட்டோர் குறிப்பாக வடக்கு பகுதியில் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம்பெறாததையிட்டு விசனம் தெரிவிக்கின்ற அதேவேளை நாட்டிற்கு தேவையான தேசிய மட்டத்திலான மீள்குடியேற்றத்தினை விரைவில் பூர்த்தி செய்து அதனை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.
07. கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தி நடைமுறைப்படுத்த இந்த பேராளர் மாநாடு கோருகிறது.
08. கரையோர மாவட்டம் உட்பட கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் இணக்கம் காணப்பட்ட சகல விடயங்களையும் உடனடியாக நிறைவேற்றித்தருமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்.
09. தற்போது முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் முகங்கொடுக்கின்ற காணிகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும்முகமாக வெளிப்படைத் தன்மை வாய்ந்த பொறிமுறையை அமைத்து உடனடியாக தீர்த்து வைக்க கோருகின்றோம்.
10. சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளராகிய நாங்கள் முஸ்லிம் சமய மற்றும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட உரிமை மீறள்கள் தொடர்பாக எமது கட்சியால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அணையாளருக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளையும் அவருக்கு வழங்கிய அறிக்கைகளையும் நாம் முழுமையாக திடமனதுடன் அங்கீகரிப்பதோடு, இம்முறைப்பாடு இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக செய்யப்பட்டது என்பதனையும் வன்முறைகளும் அவதூறுகளும் நடைபெறவில்லை என்ற பாங்கில் அரசாங்கம் செயற்பட்டதாலும் அவ்வன்முறைகளை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்காததாலும் செய்யப்பட்டது என பிரகடணம் செய்கின்றோம்
0 comments :
Post a Comment