இரத்த தானத்தில் அகில இலங்கை ரீதியாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு (SLTJ) முதலிடம்.

லங்கையில் அதிகமாக இரத்த தானம் செய்ததின் மூலம் இரத்த தானம் வழங்கும் அமைப்புகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு முதல் இடம் கிடைத்தது - அல்ஹம்து லில்லாஹ்.

உலக இரத்த தானம் வழங்குவோர் தினத்தை முன்னிருத்தி “இலங்கை இரத்த வங்கி” மற்றும் “சுகாதார அமைச்சும்” இணைந்து இலங்கையில் அதிகமாக இரத்த தானம் செய்த தனி நபர்கள் மற்றும் இயக்கங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை இன்று கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் இலங்கை மட்டத்தில் அதிகமான இரத்த தான முகாம்களை நடத்தியதின் மூலம் அதிகமானவர்களை இரத்த தானம் செய்ய வைத்த முதன்மை அமைப்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவு செய்யப்பட்டது.

இதற்கான விருது மற்றும் சான்றிதழை ஜமாத் சார்பாக ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இலங்கையில் இனவாதம் பரப்பப்படும் இந்த சூழலில் இலங்கையின் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்களின் சமுதாய பேரியக்கமான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு இரத்த தானத்திற்கான முதல் இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :