கொழும்பு கி்ராண்ட்பாஸ் அன்ரூ தோட்டப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றிரவு இடம்பற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
பேதைப்பொருள் விற்பனை தொடர்பில் எழுந்த பிரச்சினை இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண சந்தேகம் வெளியிட்டுள்ளார்
இந்த சம்பத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்
இதேவேளை, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்
0 comments :
Post a Comment