_Copy1.jpg)
_Copy1.jpg)
பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் தொற்றா நோய் சிகிச்சை முகாம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் கே.எல்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் வைத்திய முகாமுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொற்றா நோய் தொடர்பாக மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.கே.சம்சுதீனுக்கு வைத்தியசாலை அடயாள அட்டையை வழங்கி வைத்ததை அடுத்து வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தையும் பார்வையிட்டார்.
0 comments :
Post a Comment