பி.எம்.எம்ஏ.காதர்-
பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தின் புதிய அதிபராக பிரதி அதிபராகக் கடமையாற்றிய எம்.ஏ.எம்.இனாமுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். அதிபாரகக் கடமையாற்றிய எம்.எச்.குமாயூன் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எம்.ஏ.எம்.இனாமுல்லா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014-08-01ம் திகதி இவர் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதிபர் எம்.ஏ.இனாமுல்லா ஆரம்பக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கற்றார். பின்னர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் இறுதி வரை கற்று 1984-12-27ம் திகதி ஆசிரியராக நியமனம் பெற்று அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ கல்வி வலயத்தில் கட்டுக்கெலியாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் 1987-02-01ம் திகதி வரை கடமையாற்றினார்.
பின்னர் 1987-02-02ம் திகதி தொடக்கம் 1988-12-31 வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்று மீண்டும் 1989-01-01ம் திகதி தொடக்கம் 1990-02-05ம் திகதி வரை கட்டுக்கெலியாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.
அதன் பின் 1990-02-06ம் திகதி தொடக்கம் 1997-06-01ம் திகதி வரை அம்பாரை மாவட்டத்தில் கல்முனை கல்வி வலயத்தில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் கடமையாற்றி பின்னர் 1997-04-02ம் திகதி தொடக்கம் 2008-01-22ம் திகதி வரை பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.
பின்னர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் 2008-01-23ம் திகதி தொடக்கம் 2013-02-28ம் திகதி வரை ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றிய போது அதிபர் பரிட்சையில் 2ம் தர அதிபராக சித்தியடைந்து 2013-03-01ம் திகதி தொடக்கம் 2014-07-31ம் திகதி வரை பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றி 2014-08-01ம் திகதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளர்.
கல்வி மானி பட்டதாரியான இவர் மருதமுனையைச் சேர்ந்த முகம்மது அபூபக்கர் உம்மு ஹபீபா தம்பதியின் புதல்வராவார்.
0 comments :
Post a Comment