ஊவா மாகாண சபைக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

வா மாகாண சபைக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ள நிலையில் கட்சிகள் இன்றும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.இன்று முஸ்லிம்

கூட்டணி(SLMC, ACMC) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளன

நேற்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியன தமது வேட்பு மனுக்களை மொனராகலை மற்றும் பதுளை ஆகிய இரு மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளதுடன், ‘ஜனசெத பெரமுன’, ‘எமது தேசிய முன்னணி’ ஆகிய கட்சிகளும் நேற்று மொனராகலை மாவட்டத்தில் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இதற்கு முன்னர் மெளபிம ஜனதா கட்சி, ஜனதா பெரமுன கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதுடன் 11 சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜுலை 30ம் திகதி காலை 8.30 மணிக்கு பதுளை மற்றும் மொனராகலை மாவட்டச் செயலகங்களில் ஆரம்பிக்கப்பட்டது.LM
  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :