சலீம் றமீஸ்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தித்திலுள்ள இளைஞர் கழகங்களுக்கிடையில் 26 வது இளைஞர் விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சிசிரகுமார தலைமையில் இடம்பெற்றது.
இந்த இளைஞர் விளையாட்டுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட இளைஞர் கழகங்களின் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு பாலசூரிய, முன்னால் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு பி.செல்வநாயகம், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,சபை முதல்வருமான யு.எல்.முகம்மட் சபீர், உட்பட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாரை மாவட்டத்திலுள்ள இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகளும்; கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment