பெண்கள் அவதானிக்க வேண்டியவை

ற்போதைய காலங்களில் அரச நிறுவனங்களிலோ ஏனைய தனியார் நிறுவனங்களிலோ பணி புரியும் பெண்கள் ஊருவிட்டு ஊரு போய் தொழில் புரியவேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவருகின்ற, அந்தவகையில் தங்கள் பாதுகாப்பு கருதி பெண்கள் அவதானிக்கவேண்டிய வழிமுறைகள்..

தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்கவேண்டியுள்ளது. கொலை, கொள்ளைகள், கற்பழிப்புகள். மற்றும் ஜாடை மாடையாக கேலிசெய்வது போன்ற தொந்தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும்போது, சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.. 

இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பயணிப்பது மிக முக்கியம். தனியாக பெண்கள் பயணம் செய்வதென்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது.. 

பெண்களை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம்காணும் அந்நிய ஆண்களின் அலைபாயும் கண்களிலிருந்து பெண்கள் தப்பவே முடியாது. பெண்கள், இன்னும் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழமைவாதம் நிலவும் ஒரு நாட்டில்தான் வாழ்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. 

இதுபோன்ற ஒரு சமூகக்கட்டமைப்பில், பெண்கள் தாங்கள் எவ்வாறு வெளியிடங்களில் நடந்து கொள்ளவேண்டும் என்பதை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கலாச்சாரப் பெருமைக்கு இழுக்கு உண்டாக்காமல் இருக்கவும், தனியாக பயணிக்கும் போது ஏதாவது பிரச்சனை வந்தால் தன்னை பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கை வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.. 

என்னமாதிரி உடைகளை அணிகிறோமோ, அதைப்பொறுத்துதான் கவன ஈர்ப்பின் தன்மை உள்ளது. அதிலும் உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் போன்ற உடைகள் அணிவதைத் தவிர்ப்பதன் மூலம், பெண்கள் தங்கள் மேல் விழும் அந்நியர்களின் தேவையில்லாத பார்வைகளைத் தவிர்க்கலாம்.. 

எப்போதும் அணிவதற்க்கு இலகுவானதும், பாதுகாப்பான உடையில் ஒன்று தான் “ஹபாய்" புர்க்கா" போன்றஉடைகள் சிறந்து விளங்குகின்றன, மேலும் சுடிதார் அணியும் பொண்கள், அதற்கு மேல் துப்பட்டா அல்லது ஷால் அணிவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.ஆனால் எப்போதும் ஷால் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்........!!!!.


முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :