வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நம்முடைய முன்னோர்களின் முதுமொழி வாக்கு. அதற்கமைய நாம் சிரித்து மகிழ்வதும் மற்றவர்களை சிரிக்க வைப்பதும் நமது தேக ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை கருத்திற்கொண்டு 'கொஞ்சம் சிரிங்க' என்ற மகுடத்தில் ஒவ்வொருவரையும் சிரித்து மகிழச்செய்யும் மாதாந்த நகைச்சுவை சங்கமம் நிகழ்வொன்றை நம்நாடு நற்பணிப் பேரவை அறிமுகம் செய்து அந்நிகழ்வை கொள்ளுப்பிட்டியிலுள்ள புரவலர் ஹாசிம் உமர் இல்லத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்க கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பாடகர்கள், கலைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், நகைச்சுவையாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
'கொஞ்சம் சிரிங்க' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அனேகர் சிந்திக்கவும் சிரிக்கவும் வகையிலான நகைச்சுவைகளை வழங்கியதுடன் நம்நாடு நற்பணிப் பேரவைத் தலைவர் சமூகஜோதி எம்.ஏ.றபீக், செயலாளர் பீ.ஆர் பிரேம்குமார், கலைஞர் கலைச் செல்வன் உள்ளிட்டவர்களும் அனைவரும் சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய வகையில் நகைச்சுவைகளை வழங்கினார்கள்.
நிகழ்வின் இறுதியில் டொக்டர் ஜின்னா சரிபுதீனின் இலக்கிய பணியை புரவலர் ஹாசிம் உமர் பாராட்டியதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
எதிர்காலங்களில் நடைபெறவுள்ள கொஞ்சம் சிரிங்க நிகழ்வுகளில் மேலும் பல சிறந்த நகைச்சுவையாளர்களையும் உள்வாங்கி அவர்களுக்கும் நகைச்சுவை வழங்கக்கூடிய சந்தர்ப்பங்களை வழங்கி இந்நிகழ்வை ஒரு தரமான மக்களை மகிழ்விக்கக்கூடிய நிகழ்வாக நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment