பொத்துவில் பிரிவு-1 பொதுமக்களின் பிரச்சினைகளும் தீர்வுகளும்



பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ. தாஜகான் -

பொத்துவில் பிரிவு-1 பொதுமக்களின் பிரச்சினைகள் அறிதலும் அதற்கான தீர்வினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தில் இன்று 2014.10.28 பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினரும் அறுகம்பை கொமினிட்டி ஒன்றியத்தின் தலைவருமான எம்.எச். அப்துல் றகீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

பிரிவு01 பகுதி மக்களின் பிரதான பிரச்சினையாக வடிகான்கள் சரியான ஒழுங்கின்மையால் மழைகாலங்களில் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் சில உள் வீதிகள் இன்னும் செப்பனிடப்படாத தன்மையில் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

இப்பகுதி வாழ் பெண்களில் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையினை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கேட்டுக் கொண்டார்கள்.

பொத்துவில் வாழ் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து தங்கள் குறைகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் அடிப்படைப் பிரச்சினையினை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். 

இந் நிகழ்வில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். ஜகுபர் கலந்து வாழ்வாதாரத்தை உயர்த்தல் சம்பந்தமான அரச திட்டங்களை குறித்து பேசியது பயனுள்ள விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :