ஹிஜ்ரி 1436 முஹர்ரம் மாத புது வருடத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச நிகழ்வுகள்!

எம்.ஐ.பிர்னாஸ்-

ஹிஜ்ரி 1436 முஹர்ரம் மாத புது வருடத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வீரத்திடல் மபாஸா ஜும்மாப்பள்ளிவாயல் குர்ஆன் மதர்ஷா மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் ஏற்பாட்டில் புனித அல்குர்ஆன் பிரதி வழங்கும் வைபவம் ஞாயறன்று(26.10.2014) இடம்பெற்றது.

மபாஸா ஜும்மாப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் ஏ.எம்.ஹமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுத்தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு அல்குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பியசேன இங்கு உரையாற்றுகையில் முதலில் அனைவருக்கும் புதுவருட வாழ்த்தை தெரிவித்தார்.இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்திற்காக சென்ற மாதம் 2 இலட்சம் ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்துள்ளதை இங்கு தெரிவித்தார்.இப்பிரதேசத்தின் பொதுமையவாடியின் சுற்றுமதில் வேலைகளுக்காக அடுத்த வருடம் 10 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக இணைப்பாளர் தேசகீர்த்தி எம்.ஐ.றியாஸ்,நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் எம்.ஹசன் உட்பட பள்ளிவாயல் நிருவாகத்தினர் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :