அக்கரைப்பற்று திவிநெகும உத்தியோகத்தர் ஒன்றியம் 08.10.2014 புதன்கிழமை சர்வதேச சிறுவர் தினத்தினை அக்கரைப்பற்று கடற்கரை திடலில் ஏ.எல். இர்சாத் தலைமையில் வெகுவிமர்சையாக கொண்டாடியது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிறுவர் நலன் தொடர்பான பிரபல வைத்திய ஆலோசர். டொக்டர். ஆகில் அஹமட் சரிபுத்தீன், மாவட்ட திவிநெகும கணக்காய்வு உத்தியோகத்தர் ஏ.கே. பௌசுல் அமீன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் . தரம் - 5 புலமைப் பரீட்சையில் தோற்றிய ஒன்றிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும், பல்வேறு போட்டி நிகழ்சியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் அதிதிகளால் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment