அமெரிக்காவில் வருகிற 2016–ம் ஆண்டில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போது ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஆவார்.
அதே நேரத்தில் எதிர்க் கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளராக ஜெப் புஷ் (61) போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் முன்னாள் அதிபர் சீனியர் புஷ்சின் இளைய மகனும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சின் தம்பியும் ஆவார்.
இவர் புளோரிடா மாகாணத்தில் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு உள்ளது. மேலும் இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட குடும்பத்தினர் அனைவரின் ஆதரவும் உள்ளது.
இதை அவரது அண்ணன் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சும், மகன் ஜார்ஜூம் உறுதி செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டால் முன்னாள் அதிபர்களான அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆதரவில் நிதி உதவியை தாராளமாக திரட்ட முடியும் என ஜெப் புஷ் எதிர்பார்க்கிறார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment