அஷ்ரப் ஏ சமத்-
கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது வடக்கையும் - தெற்கையும் இணைக்கும் பாலம் மீள மலர்கின்றது. கடந்த கால யுத்தத்தினால் அனுராதபுரத்தில் இருந்து வவுணியாவும் யர்ப்பாண
புகையிரத நிலையங்கள், அதன் ஓடுபாதைகள் முற்றாக சீராலிந்தன. இதனால் நூற்றாண்டுகாலத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இணைப்பாலம் தடைபபட்டிருந்தது. தற்பொழுது மீள . 25 வருடங்களின் பின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாலம் அதாவது கொழும்பு –யாழ்ப்பாணம் தொடுக்கும் யாழ்தேவி கடுகதி புகையிரதம் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகி வடக்கு தெற்கு மக்களது ஜக்கியம் மற்றும் பொருளாதாரம் போக்குவரத்துச் சேவை மீள பொன் எழுத்துக்காளால் பொறிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டில் யுத்தம் ஓய்ந்த பின்னரே இந்திய கம்பணி இந்த ரயில்வே தண்டவாளாம் இட்டு புனர்நிர்மாணப் பணியை ஆரம்பித்தது. இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் 800 மில்லியன் அமேரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டு அத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கும் இந்தியா முன்வந்தது.
ஏற்;கனவே புகையிரத ஓடுபாதை ஓமந்தை- பலாலி வரை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு புகையிரத சேவை கடந்த சில மாதகாலத்திற்கு முன் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக 4ஆயிரம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். 400 தொழிலாளர்கள் இந்தத் திட்டத்திற்காக 4 வருடங்கள் நேரடியாக வேலையில் ஈடுப்படுத்தப்பட்னர் தெற்கையும் வடக்கையும் இணைப்பதற்காக 339 கி.மீ தூரம் தேவைப்பட்டுள்ளது. இந்த தொடர்பு கடந்த கால யுத்தத்தினால் 25 வருட காலம் அருந்திருந்தது. 1894ல் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
1905ஆம் ஆண்டு முதன் முதலில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பு யாழ்ப்பாணம் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்து. இப் பயணத்திற்காக கொழும்பு இருந்து யாழ்ப்பாணத்திற்காக 13 மணித்தியாலம் செலவிடவேண்டியிருந்தது. மீள 1956 ஆம் ஆண்டின் ஆரம்பிக்கப்பட்ட கடுகதி யாழ்தேவி புகையிரத்தினால் கொழும்பை அடைவதற்கு 6 மணித்தியாலயங்களுக்குள் செல்வதற்கு வழிவகைசெய்யப்பட்டிருந்தன.
இப் புகையிர திட்டத்தினை இந்திய ஜக்கோண் எனும் கம்பணி முதலில் ஓமந்தை, வடக்கு கிளிநொச்சி, பலை, பலையிலிருந்து 40 கி.மீற்றர் தூரத்தில் இத்திட்டத்தினை அமுல்படுத்தியது. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்கும் இந்த புகையிரதம் விஸ்தரிக்கப்பட்டு டிசம்பர் மாத்தில் பூரணப்படுத்தப்படும் என இந்திய ஜகோன் கம்பணியின் முகாமையாளர் திரு குப்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை மீளநிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கின்; வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கை வங்கியின் நிதிஉதவியுடன்;; மீளநிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் இலங்கை வங்கி மற்றும் ஏ.ரீ.எம். கார்ட் என்பன மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment