50 ஆவது அகவையில் காலடிவைக்கிறார் கிழக்குமாகாணசபை அமைச்சர் மன்சூர்

கிழக்கு மாகாண சுகாதார,சுதேஷ, விளையாட்டுத் துறை, சிறுவர் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் இன்று 50ஆவது அகவையில் காலடிவைக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளியாக இருந்து மறைந்த மாபெரும் தலைவருக்கு பக்கபலமாக இருந்து அரசியல் செய்து பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பலபிரச்சனைகள் வந்தும், கட்சியையும் கட்சிக்கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காது, கட்சிக்காக கட்சித்தொண்டனாக, கட்சிப்போராளியாக, ஒரு தியாகியாக தனக்கு வரும் பதவிகளை பிறருக்கு விட்டுக்கொடுத்து, தன் மக்களுக்காக, தன்னூருக்காகவும், தன் சமூகத்துக்காகவும் உரத்துக்குரல் கொடுத்து வளர்ந்து வந்தவர்தான் சம்மாந்துறை மன்சூர்.

சம்மாந்துறை மட்டுமல்லாது கட்சியின் உறுப்பினர்கள் கூட செல்லமாக நெடிய மன்சூர் என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்து வழர்ந்தவர், அவர் மட்டும் உயராமல் அவருடன் அரசியலையும் உயர்த்திக்கொண்டு சென்ற மன்சூர் இன்று கிழக்கு மாகாணசபைக்கு ஒரு முக்கிய அமைச்சராக இருப்பது ஊருக்கும், கிழக்கில் வாழும் மூவின மக்களுக்கும், தன்சமூகத்துக்கும், பெரும் கொடையாக கருதுகின்றனர்.

நேரம் பாராது மக்கள், மக்கள் என்று மக்களின் சேவைகளில் தன்னை அர்பணித்துள்ள அமைச்சர் மன்சூர் இன்னும் அரசியலில் மேலே செல்ல வேண்டும் பாராளுமன்றத்தை அடுத்த முறை அலங்கரிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். உண்மையும் அதுவாகவே இருக்கும். இன்ஷாஹ் அல்லாஹ்.

மக்களுக்குத் தொண்டும் செய்யும் சேவையாளர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்கள். அந்தவகையில் அமைச்சர் அம்ன்சூர் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தினைப்பிரிடித்துள்ளார். அவர் தொடர்ந்தும் மக்கள் தொண்டனாக இருப்பார். 

தனவு 50ஆவது வயதைத்தொட்டுள்ள அமைச்சர் மன்சூர் இன்னும் பல வருடங்கள் நோயற்ற வாழ்வுடன் மக்கள் போற்றும் வல்லரசனாக, அரசியல் ஞானியாக, மக்கள் தொண்டனாக, கிழக்கின் முத்தாக, ஊரின் சொத்தாக, மக்களின் பித்தனாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

                                                        அல்-ஹாஜ் யூ.எல்.பஷீர்
மக்கள் தொடர்பு அதிகாரி.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :