ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று முறையல்ல 5 முறை கூட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்த தடையுமில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடுவலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று அச்சமின்றி எங்கும் செல்ல முடியும். யாழ்தேவியில் நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று நாகவிகாரையில் வழிப்பாடு நடத்தி விட்டு மறுநாள் கொழும்பு திரும்ப முடியும்.
படையினரின் உதவியுடன் ஜனாதிபதி, பயங்கரவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்டதே இதற்கு காரணம்.
பாரிய காட்டை பிடித்து விட்டதாக அப்போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை கேலி செய்தார். போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதால், இன்று நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment