.jpg)
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் -
.jpg)
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாரை மாவட்டக் கிளையினர் நடாத்திய முதியோர் கௌரவிப்பு விழா நேற்று சாய்ந்தமருது பறடைஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாரை மாவட்டத் தலைவர் டாக்டர். எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் பி.டபிள்யூ.சந்திரசிறி, சம்மாந்துறை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஐ.எம்.இப்றாகீம், உளவளத் துணை நிபுணர் டாக்டர்.யூ.எல்.சறாப்டீன், அம்பாரை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எஸ்.எச்.எல்ஆதம்பாவா மௌலவி, அகில இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தேசியத் தலைவர் வீ.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அத்தனை முதியோர்க்கும் பரிசுகள் வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, இதய நோயுள்ளோரைக் கண்டறிந்து, சிகிச்சையளிப்பதற்கான இலவச பரிசோதனைகளும் இடம் பெற்றன.
மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத் தம்பி விமலநாதன் இங்கு உரையாற்றுகையில்:-
'கடந்த கால யுத்தத்தினால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மேலும் விரிவடைய அனுமதிக்க முடியாது. மக்களின் மனங்களில் தூய்மை வேண்டும். அற்ப சுகங்களுக்காக இந்த நாட்டை அழிப்பதற்குத் திட்டமிட்டு செயற்பட்டு வரும் சில தீயசக்திகளை இனங்கண்டு ஒதுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment