ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தத் தரப்புடனும் ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாது என்றும் அதற்கான அவசியமும் கிடையாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கும்படி ஜக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா என அவரிடம் வினவப் பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
ஜக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும்படி எதிர்க்கட்சிகளுடனும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும் உத்தியோகப்பற்ற ற்ற முறையில் பேச்சுவார்த்தைகளை முன் னெடுத்து வருவதாக அக்கட்சியின் செளலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
0 comments :
Post a Comment