ஹரீஸ் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!


பைஷல் இஸ்மாயில் -

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ரூபா 30 இலட்சம் நிதியொதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தில் சுயதொழில் உபகரணங்களும் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம் வழங்கும் வைபவம் நேற்று (29) புதன்கிழமைநடைபெற்றது.

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நடைபெற்ற வைபவத்திற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் உபகரணங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரப் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :