ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கப் போவது சிறுபான்மையினரே- யூ.கே நபீர்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-

திர் வரும் ஜனாதிபதித் தேர்தல் பெரும் பான்மையின இரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய சவாலாய் அமையப்போகிறது.2005 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மிகக் குறுகிய வாக்குகளால்(ஒரு இலட்சம்) வெற்றி வாகை சூடிக் கொண்ட மகிந்த ராஜ பக்ஸ தலைமையிலான அரசு 30 வருட காலமாய் இலங்கை நாட்டின் தேசியத்திற்கு அச்சுறுத்தலாய் விளங்கிய கொடிய யுத்தத்தை ஒழித்துக் காட்டியதன் மூலம் பேரின மக்களிடம் ஹீரோவாய் நடைபயின்றது.

மகிந்த ராஜ பக்ஸ தலைமையிலான அரசின் முன் தங்களால் நிற்க முடியாது எதிர்க் கட்சிகள் காற்றில் அள்ளுண்டு போன சருகுகலாட்டம் ஒரு ஓரமாய் ஒதுக்கப் பட்டன என்றே கூற வேண்டும்.எனினும், ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் எதிர்க் கட்சிகளின் சாபங்கள் நீங்க ஆரம்பித்தது போன்ற சாடைகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எதிர்க் கட்சிகளுக்கும் தங்களால் வெற்றி பெற இயலும் என்ற நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்துள்ளது மாத்திரமல்லாது புத்துயிர் பெற்றது போன்று தனது செயற்பாடுகளையும் அதிரடியாய் அமைத்தும் வருகிறது.

பெரும்பான்மையின மக்களின் வாக்குகள் இரு பெரும் பான்மையின கட்சிகளினுள்ளும் சமனாக பகிர்ந்தளிக்கப்படும் நிலைமையே தற்பொழுது தோற்றுவிக்கப்பட்டுள்ளதன் விளைவாய் ஏட்டிக்குப் போட்டியாய் தேர்தலும் அமையப் போகிறது.பெரும் பான்மையின மக்களின் வாக்குகள் சரி பாதியாய் பகிர்ந்தளிக்கப் பட்டால் ஆட்சியை தீர்மானிப்பது சிறுபான்மையினர் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை என்பது எனது தாழ்மையானகருத்து.

எனவே,எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்கள் சுய நலம் கருதாது யாவரும் ஒருமித்து தங்கள் பலத்தினை வெளிப்படுத்தி தங்களுக்கு இயலுமானதை சாதித்துக் கொள்ள முயல வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :