எம்.ஏ.தாஜகான்-
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமுக்கு நன்றிகள் பொத்துவில் இறத்தல் பள்ளியடி வட்டை விவசாய காணிகள் இம்முறை விவசாய செய்கைக்காக துப்பரவு செய்யப்பட்ட பொழுது வன பரிபாலன அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இப்பிரச்சினையினை விவசாய அமைப்பினர் பொத்துவில் பெரிய உல்லை பிரதேச சபை உறுப்பினர் எம்.எம். முபாரக் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த பொழுது உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி. பைசால் காசீம் அவர்களிடம் இப்பிரச்சினை தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் அயராத முயற்சியின் பலனாக நீதியமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்கள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் அவர்களிடம் தெரிவித்ததன் பின்னர் குறித்த விவசாய காணிகளை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வன பரிபாலன அமைப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே இப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத்தந்த அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக கடுமையான முயற்சிகளை மேற் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசிமுக்கு விவசாயிகள் நன்றியினை தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment