காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் புதிய காத்தான்குடி அன்வர்பள்ளிவாயலில் கடந்த 25-10-2014 சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்றுகூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு தொடர்பில் காத்தான்குடிகதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் 28-10-2014 திகதியிட்டுசமூக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இவ் அறிக்கை தொடர்பில் குறித்த நிகழ்வில் பங்கேற்று சிறிது நேரம் நிகழ்விலிருந்துவெளிநடப்பு செய்த உலமாக்கள் கருத்து தெரிவிக்கையில் இவ் அறிக்கையில் கூறப்பட்டமேற்படி மௌலவி அவர்கள் சமூகமளிக்கையில் அதிருப்தி அடைந்த நாமும் சிலபிரமுகர்களும் நிகழ்விலிருந்து வெளியேறி இச் சம்மேளனத்தின் தலைவரிடத்தில்அதிருப்தியை தெரிவித்து சற்று நேரத்தில் குறித்த மௌலவி வெளியேறிச் சென்றார்.
அதன் பின்னர் நிகழ்விலிருந்து வெளிநடப்பு செய்தவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகள் முடிவுற்று இராப்போசனம் நடக்கையில் குறித்த சம்மேளனத்தின்தலைவரும்,செயலாளரும் எம்மிடம் வந்து அந்த மௌலவிக்கு அழைப்பு தவறுதலாகஅனுப்பப்பட்டு விட்டதாகவும் இதுதொடர்பில் தாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்கள்என தெரிவித்தனர்.
அத்தோடு இவ் விடயம் தொடர்பில் இச் சம்மேளனத்தின் செயலாளர் கருத்து தெரிவித்த போதுஎமது அமைப்பின் பெயர் பட்டியளில் இந்த மௌலவியின் பெயர் உள்ளடங்கியதால்தான்அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் எதிர்வரும் காலத்தில் சிலர்களின் பெயர்களை எமது பெயர்பட்டியலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தாக வெளிநடப்பு செய்த உலமாக்கள் மேலும்தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment