ஏ.ஆர் தஹ்லான்-
மருதமுனை அல் மனார் பாடசாலையில் கல்வி பயிலும் க.பொ.த (சா.த) மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வு பாடசாலையின் உயர்தர பிரவின் தலைவர் எஸ். பதுருதீன் ஆசிரியர் தலைமையில் இடம் பெற்றது இதில் வளவாளர்களாக கல்முனை பிரதேச செயலக மனிதவள முகாமைத்துவ உத்தியோகத்தர் கே.எம் றிஸ்வி மற்றும் உளவள ஆலோசகரும்
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமான றினோஸ் ஹனீபா ஆகியோர்
கலந்து கொண்டனர். இச் செயலமர்வில் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான சுய மதிப்பீடு, ஆளுமை விருத்தி,நேர முகாமைத்துவம் மற்றும் வெற்றிக்கான சிறந்த வழிகல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் இடம் பெற்றது இதில் 60 உயர்தர பிரிவினைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment