கிழக்கு வாழ் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற அரசியல் அதிகாரத்தை நோக்கியும். இரவல் அரசியலுக்கு விடை கொடுக்கவும் கிழக்கு பிரதேசத்தின் முதல் பொது அரசியல் கட்சியாக பரிணமித்துள்ள மனித உரிமைக்கான ஜனநாயக தேசிய கட்சியின் பிரதேச ரீதியான அமைப்பாளர்கள் நியமனமும் கட்சியின் பிரதேச கிளை அங்குரார்ப்பனமும் விரைவில் கிழக்கு மாகாணம் முழுவதும் ஆரம்பித்து வைக்கப் பட உள்ளதாக கட்சி இன் ஸ்தாபகர் முகைதீன் பாவா அறிவித்துள்ளார் .
முழுக்க முழுக்க மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டுள்ள எமது கட்சியின் கொள்கைகளை நன்கு விளங்கிக்கொண்டு பெருவாரியாக கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வந்து கொண்டிருக்கும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக முதற்கட்டமாக கட்சியின் தொகுதி வாரி கிளைகள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் பரவலாக மேற்கொள்ளப் பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
அத்துடன் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் பல தகுதியானவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்று வருவதாகவும் மக்கள் நலனை முன்னிறுத்தி செயட்படுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மனித உரிமைக்கான ஜனநாயக தேசிய கட்சியின் ஸ்தாபகர் முகைதீன் பாவா எமது இணையத் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment