பி. முஹாஜிரீன்-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் கிரமிய மின்சார அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வையின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவச குடி நீர்க் கிணறுகள் அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இலவச குடி நீர்க் கிணறுகள் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (03) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச காரியாலயத்தில் அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாஹூதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாஹூதீன் மற்றும் மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வையின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம். ஜௌபர் ஆகியோர் பயனாளிகளுக்க தலா 25 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment