அஷ்ரப் ஏ சமத்-
மண்சரிவினால் சேதமடைந்த வீடுகளை மீள நிர்மாணிகக் அமைச்சர் விமல் வீரவன்ச நடவடிக்கை பதுளை மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்ட ஹல்துமுல்ல, மீரியாவத்தை கொஸ்லந்த கிராமங்களில் பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மீளநிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தின் பொறியியல் பிரிவு மற்றும் பதுளை மாவட்டக் காரியாலய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் குழு சேதமடைந்த வீடுகள் பற்றிய கணக்கெடுப்புக்களை எடுத்து வருகின்றது. அத்துடன் ; வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக கட்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக பரிசீலீக்கப்பட்டு இயற்கை அணர்த்தமில்லாத, பாதுகாப்பான அரச காணிகளை அடையாளம் கண்டு பரிசீலிக்குமாறும் அமைச்சர் விமல் வீரவனச்வினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இம் மக்களுக்கான தற்காலிக வீடுகளும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்து. லயன் அரைகள் அடங்கிய 70 வீடுகள் 3 சனசமுக நிலையம், பாலர் பாடசாலை, கோவில் மற்றும் அடிப்படை வசதிகளும் சேதமடைந்துள்ளன.
புhதிக்கப்பட்ட மக்களுக்கும் உயிர் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment