'வர்ணம்' தொலைக்காட்சியின் 'கன்சுல் இஸ்லாம்' நிகழ்ச்சியில் கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் உள்ள ஹக்டர் கொப்பேகடுவ கமநல ஆராச்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன 44வது வருடாந்த மாநாட்டின் தொகுப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு 'வர்ணம்' தொலைக்காட்சியின் 'கன்சுல் இஸ்லாம்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. சம்மேளனத்தின் தேசிய தலைவர் சட்டத்தரணி அல்-ஹாஜ் ரஷீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரதமர் டீ. எம். ஜேயரத்ன பிரதம அதிதியாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜீத் பிரேமதாச ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் 'உதயக்கீற்று' எனும் சிறப்பு மலர், 'ஓர் தேசப்பற்றாளனின் முழக்கம்' நூல் வெளியீடு, சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களை கௌரவித்தல், பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், இவ்வருட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி எம். நிஸ்வர் பாத்திமா சமாஹ்வை கௌரவித்தல் உட்பட முக்கிய நிகழ்வுகளும் இம்மாநாட்டில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment