இலங்கை கிரிக்கெட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் இலஞ்சம் -! விசாரணைக்கு உத்தரவு

லங்கை தேசிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு அதிகாரிகள் 'பாலியல் லஞ்சத்தை' எதிர்பார்ப்பதாக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். 

அதிகாரபூர்வமாக முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படாத போதிலும், ஊடகங்களில் வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு அதிகாரி ஜயந்த அமரசிங்க தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் திங்கட்கிழமை அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, துணைச் செயலாளர் ஹிரந்த பெரேரா மற்றும் தேசிய தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய ஆகிய நான்கு பேரடங்கிய குழுவொன்று இந்த குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

'பெண்களால் விளையாட முடியாத அளவுக்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன என்றும் விளையாடுவதற்குரிய மனநிலையில் அவர்கள் இல்லை என்றும் தொடர்ச்சியாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதன்படி, தேசிய தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவைத் தொடர்புகொண்டு இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை ஒன்றைத் தரும்படி கேட்டிருக்கின்றேன் 'என்றார் அமைச்சர் அளுத்கமகே. சனத் ஜயசூரிய இன்றுஇதுபற்றிய அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாக ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :